Pages

Monday, October 31, 2011

பகுத்தறிவிற்கு சவால்(8)

ஏழு,எட்டு வருஷங்களுக்கு முன் சென்னையில் நான்பணி

புரிந்து கொண்டிருந்த நாட்களில் ஒரு ஞாயிறன்று மாலை

வீட்டில் அமர்ந்து நான் பி.பி.ஸி. தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஒன்றைப் பார்த்தேன். ஒரு விபத்தில் மூளை பழுதாகிப்

போன நிலையில் உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாத

நிலையில் டெர்மினல் பேஷண்ட்ஸ்’’ சிகிச்சை பெறும்

ஆஸ்பத்திரியில் இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றின

குறும்படம் அது. ஆறுமாதங்கள் முன்வரை மிக கெட்டிக்காரி

யாக ,ஒரு நிருவனத்தை திறமையுடன் நடத்திவந்த அந்த

35 வயது பெண்மணி,. விபத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன்

அவராக ஒரு’’அட்வான்ஸ் டைரக்டிவ்’’ என்ற ஒரு சட்ட

ரீதியான வேண்டுகோளைத் தயார் செய்து வைத்திருந்தார்.

எந்தக் காரணத்திலாவது தனக்கு மூளைச்சேதம்ஏற்பட்டதென்றால், தனக்கு

சிகிச்சை அளிக்கப்படாமல் கௌரவமாகச் சாக விடவேண்டும்

என்று.. விபரீதமாக விபத்தில் அவரது மூளை சேதப்பட்டு,

சதைப் பிண்டமாக வாழ நேர்ந்தபோது ,மருத்துவர்கள் அவரது

வேண்டுகோளை ஏற்க மறுத்தார்கள். அது மருத்துவ தர்மத்துக்கு

விரோதம் என்றார்கள். அவருடைய சினேகிதிகள் அவள் விருப்பபஃபடி கௌரவமாக சாக விட வேண்டும் என்று

வாதிட்டார்கள். அவளை நான் எப்படி சாக விடுவேன் என்று

கணவர் அழுதார்.

இந்த நிகழ்ச்சி என்னை விநோதமாகப் பாதித்தது.

அப்போது என் தாய் மும்பையில் ஆரோக்கியமாக இருந்தார்.

ஏதோ ஓர் உந்துதலில் சிக்கியவள்போல் என் தாயை அப்படிப்

பட்ட மூளை செயலிழந்த ஒரு நோயாளியாகச் சித்தரித்து

ஒரு சிறுகதை இது ஒரு ஆணை’’ என்று தலைப்பிட்டு

இந்தியா டுடே’’ வுக்கு எழுதினேன். எழுதியபோது எனக்கு

அல்ஜைமர் என்ற வியாதியைப் பற்றித் தெரியாது. அதனால்

பாதிக்கப் பட்டவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்றும் தெரியாது. இரண்டு ஆண்டுகள் கழித்து என் தாய் என்னுடன்

வசிக்க சென்னைக்கு வந்தார். அம்மா சற்று உடல் நலிந்து

காணப் பட்டார். நான் அலுவலகத்துக்குச் செல்லும்போது

அவர் வீட்டில் தனியாக இருப்பாரே என்று வீட்டோடு ஒரு

பணிப்பெண்ணை அவரைப் பார்த்துக் கொள்வதற்காகவே

அமர்த்தினேன். படிப்படியாக என் தாயின் உடல்நிலையில்

மாற்றம் ஏற்பட்டது. டாக்டர் அல்ஜைமர் வியாதி என்றார்.

எனக்கு அதிர்ச்சி அளித்த்து அதுமட்டுமல்ல.

7 comments:

  1. சிலருக்கு உள்ளுனர்வு அதிகமிருக்கும்னு தோனுது அதான் முன்கூட்டியே அடையாளம் காட்டிடரது. சிலவிஷயங்களை நம்மலதான் புரிஞ்சுக்க முடியாமல் போகுதோன்னும் தோனுது.
    ஒரு சின்ன ரிக்வெஸ்ட்
    ராதாகிருஷ்னன் சார் வேர்ட் வெரிபிகேஷன் நீக்கிடலாமே கமெண்ட்போட கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  2. word verification என்றால் புரியவில்லையே
    என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்please
    உணர்ந்து எழுதப்படும் உங்கள் மறுமொழிகள்
    மிகவும் கருத்துள்ளவை என்று கருதுகிறேன்.மிக்க
    நன்றி அம்மா

    ReplyDelete
  3. ராதா கிருஷ்னன் டாஷ் போர்ட் போயி செட்டிங்க்ஸ் க்ளிக் பண்ணுங்க அங்க கமெண்ட்ஸ் க்ளிக் பண்ணுங்க. வரிசையா நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும் கீழ ஆப்ஷன்ஸ் இருக்கும்.அதில்வேர்ட் வெர்பிகேபிகேஷன்ன்னுஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் நோ க்ளிக் பண்ண்னும். அவ்வளவுதான்
    நீங்க என்ப்ளாக் வந்து கருத்து சொல்வதுபோல நிறைய ப்ளாக் போயி படிச்சு பின்னூட்டம் கொடுங்க அப்போ உங்க பக்கமும் நிரையபேரு வந்துபடிப்பாங்க இல்லியா?

    ReplyDelete
  4. நீங்கள் கூறியபடியே செய்து விட்டேன்.சேவும்
    செய்துவிட்டேன்.எதற்காக இது என்று கூறுவீர்களா?
    மேலும் பதிவு செய்வதில் வேகம் வரவில்லையே.
    டைப் பழக்கமில்லாததால் என்று நினைக்கிறேன்.
    எப்படி இம்ப்ரூவ் யேய்யலாம்?லாப் டாப்பில் தொட்டவுடன் எழுத்துக்கள் ஓடுகின்றன.டைப்பிங்
    வேறு கீ போர்டில் பழக வேண்டும் போலிருக்கிறது.
    அதுவரை எழுத்து எழுத்தாக அடிக்க வேண்டும்
    போலிருக்கிறது.பழகப் பழக வேகம் வரும் என்று
    நினைக்கிறேன்.பார்ப்போம்.உதவிக்கு நன்றி அம்மா

    ReplyDelete
  5. ராதாகிருஷ்னன் நாங்க கமெண்ட் போட்டதும் அது உடனே பப்லிஷ் ஆகாம இங்கிலீஷ் ஸ்பெல்லிங்க்ஸ்
    கொஞ்சம் வரும் அது சமயத்ல என்னன்னே புரியாதபடி இருக்கும் அதை நாங்க திரும்ப டைப் பன்னினதான் எங்க கமெண்ட் பப்லிஷ் ஆகும் இல்லைனா ஆகாது அதான் வேர்ட் வெரிபிகேஷன் சொன்னதும் புரிந்துகொண்டதுக்கு நன்றி.லாப் டாப்பில் டைப் பண்ணும்போது எனக்கும் ரொம்ப தகராறு ஆகும் கீ போர்ட்ல ஈசியா டைப் பண்ணமுடியரது. நான் ரெண்டுமே வச்சிருக்கேன் நாள் பட சரி ஆயிடும்.

    ReplyDelete
  6. நன்றி,அம்மா. நீங்கள் கூறவில்லையென்றால்
    இது எனக்குத் தெரிந்திருக்காது. நோயையும் கூறி
    அதற்கு மருந்தையும் கூறியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete