Pages

Thursday, January 5, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்-10

a





.



அத்தை அடிக்கடி ‘’பெருமாள் இருக்கிறார், பெருமாள் பார்த்துக் கொள்வார்’’ என்று சொல்லுவாளே!அவர்தான் இங்கே இந்த உருவத்தில் வந்து அவனை
இப்போது காப்பாற்றினாரா? பட்டணத்தில் கோயில் கொண்டிருக்கும் பார்த்த
சாரதியே இவரை அனுப்பி,’’வேதாந்தம் வந்து கொண்டிருக்கிறான், பட்டணத்திறகு அவன் புதிசு , பரம சாது, தாய் தகப்பன் இல்லாத பிள்ளை, நீ கவனித்துக் கொள்’’ என்று உத்தரவு போட்டிருக்கிறாரா?


‘’பார்த்தசாரதி’’ என்றதும் , அத்தையுடனும் செல்லத்துடனும் ஒரு நாள் ராமாயணப் பிரவசனம் கேடகப் போயிருந்தபோது தெரிந்து கொண்ட ஒரு
அறபுதமான’ உபகதை’ மனதில் முன்னே எழுந்தது.


ராமாயணம் சொல்பவர் ஒரு மகான். அனுபவித்துச் சொன்னார். அவர் உள்ளத்தில் இருந்த ஒளியை நாற்புறமும் வீசினார் .சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தேன் மழையாகப் பொழிந்தார் அவ்வப்போது வேதததிலிருந்து வாக்கியங்களையும் திருஷ்டாந்தமாககஃ காட்டினார். பரவசம்
கொள்ளும்படி உபகதைகளை எடுத்துச் சொன்னார்.


அன்று அவர் சொன்ன கதை ஆதிசங்கரர்,மாத்ருகர்மா செய்தது பற்றியது.
சனயாசம் பெற்றுக் கொண்டு செல்லும்போது போது அவர் மாதாவிடம்’’ அம்மா! நான் எங்கே இருந்தாலும் உன் வியோக காலத்திலே என்னை நினைத்துக் கொள். உன் பக்கத்திலே ஓடி வந்து விடுகிறேன்.’’ என்று கூறி
விடை பெற்றுக் கொண்டார். பல வருஷங்களுக்குப் பிற்பாடு, சிஷ்யர்களுக்கு மத்தியில் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது, சங்கர்ருடைய கணகளில் நீர் சுரந்தது. அருகாமையில் இருந்த சீடர் , இதைக் கவனித்து காரணம் என்னவென்று கேடகவும் , பகவத்பாதர், ‘’என் தாயாரிடம் வருவதாகச் சொல்லியிருந்தேன் . இப்போது என்னை நினைத்துக் கொள்கிறாள்கிறாள்.!’’ என்று கூறிவிட்டு கிருஷ்ணனை மனதில் தியானம் செயது எட்டு ஸ்லோகங்களைச் சொன்னார். உடனே பார்த்தசாரதி, ருக்மணி சமேதராக, சங்கர்ருடைய மாதாவின் பக்கத்திற்குப் போய்விட்டார்.


ஏன் ஆச்சாரியர்கள் தாமே முதலில் போகவில்லையென்றால்,தன் பிள்ளை கிருஹஸ்தனாக, மனைவி மக்களுடன் இருக்கவேணும் என்பது மாதாவின் ஆசை. அவளுடைய மரண சமயத்தில் காஷாயதாரியாகத் தம்மைப் பார்த்தால்
ஆயாசம் பொள்ளுவாளோ என்றே கிருஷ்ணனை வேண்டினாராம்.




‘’அம்மா!’’ என்றார் பார்த்த சாரதி.

‘’ சங்கரா!’’ என்று கண்ணைத்திறந்த தாயாருக்கு, கிருஷ்ணபரமாத்மா தரிசனம்
தந்தார்.. புளகாங்கிதம் அடைந்துவிட்டாள் அவள். ‘’என் குல தெய்வமான நீயா என் பக்கத்திறகு வந்துவிட்டாய்?’’ என்று கேட்டாள்.


‘’ஆம். உன் பிள்ளை உத்தரவு போட்டுவிட்டான். ஓடிவந்துவிட்டேன்.’’ என்றார் பார்த்தசாரதி.

என் பிள்ளையா? சங்கரனா? அவனா, உனக்கா உத்தரவு போட்டான்?’’

‘’ஆமாம்! சங்கரன் என்றால் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?,அம்மா! கைலாசபதியான சங்கரனே அல்லவா அவன்!’’’

இந்தக் கதை ஞாபகம் வந்தது வேதாந்தத்திறகு இரு கணகளிலும் ஜலம் சுரந்து வழிந்தது. பக்த பராதீன்னான பிரபு, அத்தை சொல்லிக்கூடக் கேட்டுவிட்டாரா?
இது அவருடைய ஊரல்லவா என்று நினைத்துக் கொண்டான் வேதாந்தம்.
குருக்ஷேத்திரத்திலே தன் பிரதிக்ஞை போனாலும் போகட்டும், பகதனுடைய பிரதிக்ஞை வீணாக்கஃ கூடாதென்று பீஷ்மாசாரியாருக்காக ரதஃததிலிருந்து குதித்து ஓடி
வந்த மங்களமூர்த்தி ஆயிற்றே? கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது வேதாந்தத்திறகு அவன் முகத்தையே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார்
எதிரில் இருந்தவர்.


ஏன் சார்1 இட்லியில் மிளகாய்ப்பொடி ரொம்பக் காரமாகிவிட்டதோ?’’ என்று குறும்பாககஃ கேட்டார்.

பதில் சொல்ல முயன்றான் வேதாந்தம். அவனால் முடியவில்லை. மிகுந்த பிரயாசையுடன், நீங்கள் செயத உபகாரம் என்னால் மறக்க முடியாதது,சார்!
நான்—நான்—‘’ என்றான்.

‘’எனக்கு அந்த நான்சென்ஸெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க அவகாசம் இல்லை. நீர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு என்னுடன் வரப்போகிறீரா? இல்லை, நான்போய்விடட்டுமா?’’ என்று வெடுக்கென்று கேட்டார். அவருக்காக ஓட்டல்
வெளியே கார் நின்றது. ஸ்டேஷனில் அவரை எதிர்பார்த்து அது வந்திருக்கிறது. இப்போது டிரைவர் தன் ஸதானத்தைவிட்டு வண்டியின் பின்னால் ஒதுப்புறமாகப் போய் உடகார்ந்து கொண்டிருந்தான். ‘’உமக்கு எங்கே ஜயா போகணும்?’’ என்று வேதாந்தத்தைக் கேட்டார் அவர்.


‘’நான் ஆராவமுது கார்டன்ஸ் போகிறவன். மிக வந்தனம் நான் வரட்டுமா? என்று பதில் சொன்னான் வேதாந்தம்.

‘’உடகார் ஜயா, பக்கத்திலே! ஆராவமுது கார்டன்ஸிலே யார் வீடு?’’

கும்பகோணம் சந்தானம் அய்யங்கார். உங்களுக்குத் தெரியுமோ அவரை?’’

கார் போய்க் கொண்டிருந்தது.. ‘’எனக்கு இந்த ஊரில் யாரையுமே தெரியாது.

கும்பகோணம் எக்ஸ்டென்ஷனிலே இருக்கிறாரே, அவர்தானே’’?’’

‘’ஆமாம், அவர்தான்’’.

‘’அவர் வந்துவிட்டாரா? அவர் மாதிரி இருந்ததே! ஓஹோ! அவருக்கென்ன, நீர் மாப்பிள்ளையா? மாப்பிள்ளையாக இருந்தால் உம்மையும் கூடவே காரில் அழைத்துக் கொண்டு போயிருப்பாரே? அவர் வீட்டில் உமக்கென்ன காரியம்?’’

வேதாந்தம் சுருக்கமாக தான் ஒப்புக் கொண்டு வந்திருக்கும் வேலையைச் சொன்னான்.தன் ஊரைச் சொன்னானே ஒழிய தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

‘’எத்தனை பசங்களுக்கு டியூஷன்?’’

‘தெரியாது, ஜந்தாறு பேர் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.!’’

ஹஹ்ஹஹஃஹா!’ என்று சிரித்தார் அவர். நினைக்கிறீரா? எத்தனைபேருக்கு டியூஷன் என்று கேட்டுக் கொள்ளாமல் சம்பளம் பேசினீரோ?’’ என்று கேட்டார்.

‘’இப்போது சென்னைக்கி யாராவது அழைத்துவந்தால் போதும் என்ற நிலையில்
இருக்கிறேன்’’

‘’ அப்போ வேறு வேலை கிடைத்தால் உடனே இதை விட்டு விடுவீரோ?’’

‘’அப்படி இல்லை.சந்தானம் அய்யங்காரிடம் சொல்லாமல் நான் எதையும் செய்ய மாட்டேன்,’’

‘’அவர் போக்கஃ கூடாது என்றுதான் சொல்லுவார் ஹஹ்ஹா!—ஏழு பசங்க
ளுக்கு முப்பது ரூபாய்க்கு டியூஷன் சொல்லித்தர வேறு ஆள் கிடைப்பானா அவருக்கு!’’

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

4 comments:

  1. ஆதி சங்கரரின் கதை படித்து இருக்கேன் அவ அம்மாவின் கடைசிகாலத்தில் அவர் வந்த்தது நெகிழ்ச்சியான தருணம். எவ்வளவு அம்மாக்களுக்கு கிடைக்கும்.மகனின் அருகாமை.

    ReplyDelete
  2. மிக உருக்கமான இந்த நிகழ்ச்சி என்னைமிகவும்
    பாதித்த ஒன்று. இறுதி சமயத்தில் நான் மிகவும்
    நேசித்த என் அம்மாவின் அருகில் இருந்து கையைப் பிடித்துக் கொண்டேயிருக்கும் பேறு தெய்வாதீனமாக
    எனக்குக் கிடைத்தது.இந்தப் பேறு உள்ளூரிலேயே
    இருந்த சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய நாடகளில்
    பையன்கள் காரியமாகப் பல ஊர்களுக்கும் செல்ல வேண்டியிருந்த்து.நல்ல வேளையாக அப்பொழுது
    இருக்க முடிந்தது எல்லாம் ஆண்டவன் சித்தம்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
  3. என் வீட்டுக்காரர் போனப்போவும் இதுபோல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடந்தது. இப்ப நினைச்சாகூட கண்களில் கண்ணீர் வந்துடும்.

    ReplyDelete
  4. உங்கள் அளவு அநுபவங்கள் யாருக்கும் இருக்காது
    அம்மா. எல்லாமாகச் சேர்ந்துதான் உங்களை ஸ்புடம்
    போட்டு எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக
    ஆக்கியிருக்கிறதென்று நினைக்கிறேன்.இப்படிப் பலர்
    அநுபவங்களயும் கதைகளின் மூலமும் தெரிந்து கொள்வது பயனளிக்கிறது எனபதால்தான் நாம்
    கதை,நாவல்களை விரும்பிப் படிக்கிறோம்.
    பிறர் அநுபவங்கள் மூலமும் நாம் நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது நன்றி அம்மா

    ReplyDelete