Pages

Sunday, January 8, 2012

தேவன்- மனிதரில் பலவிதம்--13

a









கூடத்தின் நடுவே, வாசலை நோக்கியவாறு பெரிய பிரம்பு தைத்த ஈஸிசேரில்
சந்தானம் அய்யங்கார் உட்கார்ந்து, சாய்ந்து, கால்களை நனகு நீட்டித் தூக்கிப்
போட்டுக் கொண்டார், இந்த இடம் வீட்டிற்கே ஒரு கேந்திரஸ்தானம். வாசலில்
வருபவர், மாடிக்குப் போகிறவர், உள்ளே செல்பவர்,உள்ளிருந்து வெளியேறுபவர் அவ்வளவு பேரையும் படுத்தபடியே கண்காணிக்கலாம். சீனிக்கும், ராகவனுக்கும் சங்கடமானதொரு ஸ்தலம் இது.. இப்போது இருவரும் மெல்ல மாடி ஏற முயன்றபோது, ‘’டேய்’’ என்ற அதிகாரக் குரல்
கேட்டு நின்றார்கள்.

(இந்த இடத்தில் நான் ஒன்று கூறவேண்டியுள்ளது.சின்ன வயதில் எங்கள் நிலை இதுபோல்தான் இருக்கும். மிகக் கண்டிப்புக் காரரான என் தந்தை,,,,
வீட்டில் இம்மாதிரி ஒரு கேந்திரஸ்தானத்தில்தான் அமர்ந்து புத்தகத்தைக்
கையில் வைத்திருப்பார். அவர் அறியாமல் அணுவும் அசைய முடியாது.
அந்தக் காலத்தில் எல்லார்ரும் இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது
அப்போதுதான் குடும்பத்தில் ஒரு டிசிப்ளின் இருக்கும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது..)


‘’மாடியில் என்னடா உங்களுக்கு?’’

‘’’சும்மாதான் போகிறோம்’’ என்றான் ராகவன்.

‘’சும்மா ஒருத்தன் மாடி ஏறுவானா? உம்—வாத்தியார் வந்திருக்கிறார் அல்லவா? நீங்கள் சும்மா சும்மா மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கவா
அவர் வந்திருக்கிறார்? உங்கள் பாடங்களைச் சொல்கிறதற்கென்ன? ஹூம்’’—


‘’அவர் இன்னும் எங்களைக் கேட்கவில்லை’’ என்று முனகினான் ராகவன்.

‘’அசத்து! அவர் கேடகமாட்டார். நீங்கள்தான் அவருக்குச் சொல்லணும். அவர்
சொல்லித்தர இல்லை. நீங்கள்தான் கற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். அதுதான்
விஷயம். நீங்கள் கேடகாவிட்டால் , அவர் பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறார்.!’’

சந்தானம் தன்னையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறாரோ என்று வேதாந்தம்
உள்ளூறக் கவலைப் பட்டான். ஆனால் ஆசாமியைப் புரிந்து கொள்ளுமுன், வாயைத் திறக்கக்கூடாதென்று பேசாமல் பின்னாலேயே நின்றான்.

சாரங்கன் குறுக்கே , ‘’வாத்தியாரும் பொறுப்பாக நடந்து கொண்டு,’’ இன்றைக்கு இது ஆயிற்று’ என்று இருக்க வேண்டாமா? நமக்கென்ன, மாசமானால் சம்பளம்’ என்று நினைக்கப் படாதே! என்றான்.


‘’அதுவும் சரி! அவர் அப்படி இருந்தால் நஷ்டம் யாருக்கு? நம்ம பயல்கள்தான் நெரியாததைக் கேட்டுக் கொண்டும், அப்பப்போ வாசித்துக் கொண்டும் வரணும்.!’’ என்றார் சந்தானம். பிறகு அவருக்கு ஏதோ நினைவுக்கு வந்தவ் போல சடாரென்று நிமிர்ந்து உடகார்ந்தார்.


‘இந்த ராஜகோபாலன் (சீனியின் அடுத்த அண்ணா) கோவேறு கழுதை1 காலேஜில் படித்தானே! என்ன திமிர்! என்ன நடை! ஜமீந்தார் பிள்ளை என்று நினைத்துக் கொள்கிறது, ஜமா சேத்துக்கறது, ஊர் சுத்தறது! அட1 நமக்குப் பணம் இருந்தது. நஷ்டப் பட்டோம்1 இல்லையென்றால் என்ன கதியாகிறது? ஹூம்! அப்பப்போ பாடங்களை வாசி என்று முட்டிக் கொண்டேனே. காதில் போட்டுக் கொண்டானா? கோயில் மாடாட்டமா அலையறது1 கடைசியிலே என்ன? கடைசியிலே என்ன ஆச்சு? எதிர் பார்த்தது நடந்து விட்டது.’’ என்று
இரைச்சலில் ஆரம்பித்தார்.


‘நம்ம ராஜகோபாலன் பரீட்சை எழுதின வருஷம் ஒரே ‘ஸ்லாட்டர்’ மாமா!—அதை—‘ என்று சாரங்கன் பேசினதை அவர் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.


‘’ யாருக்கு ஸ்லாட்டர்’’? கையாலாகாதவன் பேசற பேச்சுன்னா அது! இவனை யார் ஜயா முப்பது மார்க்குக்குத் தயார் பண்ணிக்கச் சொன்னது? புத்தகத்திலே இல்லாத்தைப் பரீடசையில் கேட்டுவிடவில்லையே, ஜயா? நான் சொல்றேனே! படிப்பை என்னமோ விளையாட்டு மாதிரின்னா நடத்தினான். முதல் வருஷத்திலே அடுத்த வருஷம் படித்து விடலாம் என்கிறது. அடுத்த வருஷத்திலே, பின் ஆறு மாசத்திலே படிக்கலாம் என்று ஒத்திப் போடுகிறது. அப்புறம் கடைசி’ டெர்ம்’லே படிக்கலாம் என்கிறது அப்புறம் கேள்விப் பேப்பர் லீக் ஆகாதான்னு திரியறது! எப்படி ஜயா பாஸ் ஆகும் எனகிறேன்! சீச் சீச் சீச்சீ! இந்தக் காலேஜ் படிப்பிலே பசங்கள் தலைவிரிச்சு ஆடினதிலே எத்தனை குடும்பம் வீணாகப்போயிடுத்து ஜயா! பெற்றவன் கடன் வாங்கி, உடன் வாங்கி மானத்தை விற்று, தலையை அடகு வைத்துக் காலேஜில் சேர்த்தால், இவன் ‘பிக்னிக்’ பண்ணிக் கொண்டு அலைகிறான் முடிவு என்ன ஆகும்? நான் சொல்றேன், மூணு பார்ட்டும் போடுகிறது நாமம்’’ மூச்சு வாங்கியது அவருக்கு.

சாரங்கன் இரண்டு முறை ஏதோ பதில் சொல்ல வாயைத் திறந்தான் மாமனார்
குரல் ஓங்கியிருக்கவே ஒன்றும் உபயோகம் இல்லையென்று அடங்கினான்.
இரைச்சலைக் கேட்டு வைதேகி ஏதேனும் சண்டைதான் மூண்டு விட்டதோ என்று விரைந்து வரவே, ‘’ ஒன்றுமில்லை1 எல்லாம் தமாஷ்!’’ என்று சொல்லிச் சாரங்கன் அவளை அனுப்பினான் உள்ளே.


சந்தானம் உறுமினார். ‘’வாத்தியார் எனகிற பக்தி போயிடுத்து. வாட் ஈஸ் தி ரிஸல்ட்? நாசம், நாசம் தான்!’’


சாரங்கனுக்கு ‘ஆமாம், ஆமாம்’ என்று தலையை ஆட்டுவது தவிர வேறு வழியில்லை. வாயடைத்துச் சிலை போல ஸதம்பித்து உட்கார்ந்து விட்டான்.

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

--

3 comments:

  1. எல்லார் வீட்டிலும் இதுபோல ஒர்வர் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க போலதான் இருக்கு.ஒவ்வொருவர் ஒவ்வொரு பார்வையில் விமரிசிக்கிராங்க. வேதாந்தம் இந்தமாதிரி இடத்தில் வந்து சேர்ந்திருக்கார். குழந்தைகளுடன் பெரியவர்களையுமே சமாளித்தாகனும் போலத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது சரிதான் அம்மா.வேலை வாய்ப்பு
    அதிகம் இல்லாத அந்தக காலத்தில், கிடைக்கிற வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு அடுத்த வேலைக்கு முயற்சி செய்வார்கள்.கெட்டும் பட்டணம் சேர் என்பார்களே அதற்காகத்தான் வேதாந்தம்
    பட்டணம் வந்திருக்கிறான் போலும்.
    வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி அம்மா.

    ReplyDelete
    Replies
    1. ராதா கிருஷ்னன் எங்க போனீங்க ஊருக்கு எங்கியானும் போயிருக்கீங்களா? உடம்புஏதானும் ப்ராப்லமா?
      உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன். என்பக்கம் வந்து பாருங்க.

      Delete