Pages

Wednesday, December 28, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்-4

ஒரு முறை கடைத்தெருவில் ஒரு மோட்டாரிலிருந்து வைரம் கோபாலசுவாமி அய்யங்காரும் ஒரு செட்டியாரும் இறங்கியதைக் கண்டான்.. வேதாந்தம் எதிரில் அருகாமையில் இருந்தானாகையால், வைரத்தின் கண்களில் பட்டிருக்க வேண்டும். என்று எண்ணி, மரியாதைக்காகஃ கை கூப்பினான்.வைரம் அதைக்
கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் தலைக்கு மேல் எதையோ பார்த்தார்.
சௌக்கியமா ?’’ என்றுவேறு கேட்டுவிட்டான் வேதாந்தம்., உடனேயே ஏன் கேட்டோம் என்று மிக நொந்து கொண்டான்.

செட்டியார் , வேதாந்தம் கேட்டதைக் கவனித்து, ‘’அய்யங்கார், உங்களை யாரோ கேடக்கிறாங்களே! என்றார்.
கோபாலசாமி ஒருமுறை வேதாந்தத்தை விறைத்துவிட்டு, என்னையாக இருக்காது!’’ என்று சொல்லிக் கொண்டு நடந்துவிட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் ‘’ஹல்லோ!’’ என்று அவன் முதுகிலே ஒரு ஷொட்டு விழுந்தது திரும்பிப் பார்த்தால், பழைய ஹாஸ்டல் நண்பன் சீதாராமன் நின்றான்.

என்னப்பா! உன்னைப் பார்த்து எத்தனையோ யுகங்கள் ஆச்சு!’’ என்று கேட்டான் சீதாராமன்.

உன்னைப் பார்த்தும்தான்! உன் நம்பர் பத்திரிகையில் பார்த்தேன். மூணுபாகமும் செகண்டஃ கிளாசில் இருக்கிறது.! நமக்கு மூணும் ஃபோர்த் கிளாஸ்!’’ என்றான் வேதாந்தம்.

சே1 அதெல்லாம் ஒரு ப்ளூக்’’! தவிர, அந்த சமயத்திலே உனக்கு எத்தனை
சங்கடம்! உன் தகப்பனார் போயிருந்த சமயம்—இன்னொருத்தனாக இருந்தால்
அந்த சமயத்தில் பரீடசையில் உடகார்ந்து எழுதியே இருக்க மாட்டானே? நீ, என்ன, செப்டம்பரிலே ஒரு சான்ஸ் பார்க்கிறாயா? என்று கேட்டான் சீதாராமன்.

‘ஊம் ஹூம்! இனிமேல் படிக்க முடியாது நம்மால்1’’
‘’உனக்கென்ன,அப்பா பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார். படிக்கத் தேவையும் இல்லை. உத்தியோகம் அவசியமும் இல்லை. நான்தான் ஒரு வேலைக்கு அலைகிறேன்., அலைகிறேன்,கிடைக்கவில்லை.’’

‘’சர்க்கார் உத்தியாகம் ஏதானும்—‘’

‘’ஊம். அதெல்லாம் கிடையாது.! மெட்ராஸிலே கம்பெனி,கிம்பெனி என்று
புகுந்து கொண்டால்,நாளக்கு அதிர்ஷ்டமிருந்தால் நாமே முதலாளியாக்கஃ கூட வரலாம். எனக்கு ‘’லா’’ படிக்கணம்னு ஆசை. பொருளாதாரம் போதவில்லை! இப்போ முன்னாடி, நமக்கு மெட்ராஸிலே போய் தங்க ஒரு இடம் வேணும்.
அது கிடைத்தால் ஜமாய்ச்சுடுவேன்.!’’

‘சரிதான், இப்போ—‘’
‘’ஆமா! அந்த முயறசியிலேதான் ஈடுபடுத்திண்டிருக்கேன் டயத்தை---- இங்கே
எக்ஸ்டென்ஷனிலே மிஸ்டர் சந்தானம் அய்யங்கார் என்று தெரியுமா உனக்கு?’’
‘’தெரியாது’’
அவர் பெரிய ஆள். ந்ல்ல காசு. ஏகப்பட்ட பிள்ளை பெண்கள்- மொத்தம் பதினாலோ பதினைந்தோ1அவர்களில் கடைசி நாலு பசங்களுக்கும் , மூத்த
இரண்டு பையன்களுடைய குழந்தைகளுக்கும் ஆள் தேடுகிறதாகத் தெரிந்தது.
ஒரு சின்னப் பள்ளிக்கூடம் போடலாம்.. எல்லாம் மெடராஸிலே போய், பங்களாவில் ஜாகை. ஒரு சமையல்காரன். ஒருவேலைக்காரன் சந்தானம் அய்யங்கார், இந்தப் பசங்கள், ஒரு டியூஷன் வாத்தியார், எப்படி! நினைத்தபோது சொல்லிக் கொடுக்கலாம். கையிலே நாற்பது ரூபாய்
கொடுப்பதாகச் சொன்னாற்கள்.’’
‘’தேவலையே, ரொம்ப சௌக்யமாச்சே!’’

நானும் அப்படித்தான் நினைத்தேன்., வேதாந்தம்., அவரை நேரில் கண்டு கேட்டு
விட்டுத்தான் வரேன் இப்போ! பி.ஏ. செகண்டஃ கிளாஸ் என்றேன். பி.ஏ. பெயிலானால்கூடப் பாதகமில்லை என்று அவர் சொல்லிவிட்டார்.’’’

‘’பேஷ் பேஷ்! அப்புறம்’’

‘’பசங்களையும் பார்த்தேன் , நல்ல இடம். போய் மெட்ராஸிலே இருந்துகொண்டு, கவனித்துக் கொண்டே வந்தால் சரியான சமயத்திலே= என்ன! சரியான சமயத்திலே எங்கேயானும் தாவிக்கொள்ளலாம்’’

((அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

2 comments:

  1. முன்னேல்லாம் வேலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ கிடைக்கும் வேலையில் சேர்ந்துகொண்டு பிறகு பாத்துக்கலாம்னு இருக்காளே.

    ReplyDelete
  2. நீங்கள் வடக்கே இருந்ததால் அதிகம் தெரியவில்லை
    என்று நினைக்கிறேன்.இங்கு முன்பெல்லாம் வேலை
    வாயப்பு மிகவும்குறைவு . அதிலும் நம்மவர்களுக்கு
    கேடகவே வேண்டாம்.அதனால்தான் வசதிகுறைந்த
    பெரும்பாலோர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் குறுக்குப் படிப்பு எனப்படும் டைப்,மற்றும் ஷார்ட் ஹேண்டஃ முடித்துவிட்டு
    பம்பாய், டில்லி, கலகத்தா என்று போ
    ய்விடுவார்கள், ஒருவர் போய் மற்ற உறவினர்களையும் இழுத்துக் கொள்வார்கள். அப்படித்தான் அங்கெல்லாம் நம்மவர்கள் கணிசமாக ஓரளவு வசதியாகவும் இருக்கிறார்கள்
    மதராஸிகள் உண்மையானவர்கள் என்ற நல்ல பெயரையும் எடுத்துள்ளார்கள். இன்று நிலைமை
    பரவாயில்லை.
    நன்றி அம்மா

    ReplyDelete