Pages

Sunday, December 25, 2011

தேவன்- மனிதரில் பலவிதம்

வைரம் ‘’ கோபால சுவாமி அய்யங்கார் கும்பகோணத்தில் நல்ல
செலவாக்கோடு நல்ல செயலில் இருந்து வந்தார் என்றால் , அதறகு
அவருடைய முகவிலாசமும் சாமர்த்தியமும் பெரிய காரணங்கள்
எனபதை முதலில் ஒப்புக கொண்டாக வேண்டும். ஆரம்ப காலத்திலே

சிரமதசையில் இருந்து, படிப்படியாக ஏறி வந்தவராகையால், எந்த
இடத்தில் பணம் தங்கலாம், எந்த இடத்தில் க்ஷணகாலமும் வைக்கக் கூடாது
எனபது அவருக்கு ஓர் உள்ளுணர்வாகவே வளர்ந்துவிட்டது. யாரிடம்
எப்போது பேசலாம், எப்போது ஒருவரை அடையாளம் கண்டு கொள்ளலாம்
எப்போது அவசரமாக வெளியேற வேண்டும் என்ற வித்தைகள் தாமாக வந்துவிட்டன.

கோபால சுவாமி அய்யங்கார் எதிரில் உடகாரந்து ஒருவரைப் பார்த்துக் கொண்டேதான் இருப்பார். ஆனால் தெரிந்துகொண்டார் என்று சொலவதறகு
முகபாவத்தில் லவலேசமும் தெரியாது. சம அந்தஸ்துள்ளவர்களின் சமூகத்தில் இருக்கும்போது தெரிந்தகொள்ளாதவர்களைத் தனிமையில் காணும்போது சிலாகித்துப் பேசுவார். பொதுவில் ‘’உங்களைப் போல் உண்டா?’’ என்று புகழ்ந்துவிட்டு,தம்வீட்டில்,’’வெறும் உதவாக்கரை அவன்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

மிதரபேதம் செய்துவைப்பதில் புலி அவர் அந்தச்சமயங்களில் அவர்
போடும் தர்ம்புத்திர வேஷம் அறபுதமாக இருக்கும். குப்புசாமியைக் கூப்பிடுவார்.’’ நீ மகா புத்திசாலி, எனக்கு அப்போதே தெரியும். ஆனல் உன்தம்பி
செய்கிறதைப் பார்க்கும்போது உன் தம்பிதானா அவன் என்று சந்தேகம் வருகிறதடா!’’ எனபார். குப்புசாமி(அவன் அசடாகத்தான் இருப்பான்) ‘’ஆமாம் சார்! அவன் காரியங்கள் எனக்கும் பிடிக்கிறதில்லை! என்று பேச்சுவாக்கில்
ஏதாவது உளறி வைப்பான்.அய்யங்கார் அடுத்த சமயம் குப்புசாமியின் தம்பியைப் பார்க்கும் போது ‘’என்னடாது உங்க அண்ணன் ஏதேதோ உளறிக்
கொண்டு திரிகிறானேடா உன்னைப் பற்றி ! நான் வேண்டாமென்று ஒருமாதிரி
அடக்கினேன். நான் சொன்னதாகத் தெரிய வேண்டாம் இங்கே வந்துடுவான்.
உன்மட்டில் ஜாக்ரதையாக இரு!’’ என்று அவன் முதுகைத் தடவி ஓர் ‘’எச்சரிக்கை’’ போட்டு வைப்பார்.

இதைவிட ஆச்சரியமான குணாதிசையம் ஒன்றும்அவரிடம் உண்டு. அபிப்ராயத்தை மாற்றும் வேகந்தான் அது! ‘’அடே! ராம்பத்திரன் சுத்த அயோக்கியப்பயல்! அவன் அத்திம்பேர் வந்து சொன்னப்பறம்தான் தெரிகிறது.
இந்தமாதிரி ஆள்களை வெட்டி மடைவாயில் வைத்தாலும் பாபம் இல்லை, ஹூம்! எனபார் ஒரு நாள். அன்று ராம்பத்திரனின் அத்திம்பேர்
அவரிடம் வியாபாரம் செயதிருப்பார். மூன்று நாள் கழித்து ராம்பத்திரனே
ஒரு ‘’பேரம்’’ கொண்டு வர வேண்டியதுதான் அய்யங்காரின் அபிப்ராயம் ஒரு
சடார் ‘’பல்டி’’ அடிக்கும். ‘’நான் என்னமோ நினைத்துவிட்டேன்! முழுக்க கேட்டப்புரம்னா விஷயம் வெளியிலே வர்றது! வெறும் கச்சடாப்பயல் அத்திம்பேர் எனகிறவன்.! சீச் சீச் சீ1 பன்னாடை! அவன் கழுத்தைச் சீவினாலும் பாபம் இல்லை!’’ என்று கூசாமல் கூறுவார்.

எப்படி இருந்தால் என்ன! இன்று’’ வைரம்’’ கோபாலசுவாமியிடம்
பணம் இருந்தது. ஆகவே அவருக்கு மதிப்பு இருந்தது. ஊரில் அட்டகாசம்
செய்தார். பணம் சேரும் என்று மனதிற்குப் பட்டால் அது எந்த வியாபாரம்
ஆனாலும் தைரியமாக –இதயத்தையும் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துவிட்டு—இறங்கிவிடுவார்

(அமரர் தேவன்—மிஸ்டர் வேதாந்தம்)

2 comments:

  1. மனிதர்களின் நிறம் மாறும் குணம் மாறும் பச்சோந்தி தனத்தை எப்படி சொல்லி இருக்கார். நாமும் இப்படி பல பேரை சந்தித்து இருப்போமே என்று நினைக்க வைக்கும் எழுத்துத் திறமை.

    ReplyDelete
  2. கதையில் வரும் இடங்கள்,வரும் மனிதர்கள்
    ஆகியவற்றை எங்கோ பார்த்திருக்கிறோமோ என்று
    நினைக்க வைப்பதுதான் நல்ல கதை என்று ஒரு
    பத்திரிகை ஆசிரியர் எழுத்தாளரிடம் கூறுவதாக
    இந்த நாவலிலேயே ஒரு இடத்தில் வரும்.அப்படிப்பட்ட அருமையான எழுத்தாளர்
    தேவன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா

    ReplyDelete